ஊட்டி மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரத்து

கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் முதல் உதகை இயக்கப்படும் மலை ரயில் தற்காலிகமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 7ம் தேதி ரெட் அலெர்ட் என்ற அறிவிப்பு வந்த நிலையில் நேற்று அது வாபஸ் பெறப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

மலைகளின் இளவரசியான ஊட்டியில் மழை பெய்துவருகிறது. தற்போது 2ம் சீசன் நடந்து வரும் நிலையில் சிலநாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மண் சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலைரயிலை தற்காலிகமாக 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளனர். மேலும் நேற்று உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்ட மலைரயில் பழுதானதால் வழியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வேறு ஒரு ரயில் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

More News >>