வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைத்ததில் பின்னணி இருக்கிறது: துரைமுருகன்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல தொகுதிகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளது தேர்தல் ஆணையம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் பொருளாளர் துரைமுருகன், தமிழகத்தில் இறந்தவர்களின் பெயர்களை கொண்டு வாக்கு செலுத்த திட்டம் தீட்டி இருப்பார்களோ என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர், "வானிலை மையமே ரெட் அலெர்ட் என்ற அந்த வார்த்தையை வாபஸ் வாங்கி விட்டது. தற்போது தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் நேரத்தில் வராத மழையை காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திற்கு இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பது பின்னணியில் ஏதோ நடக்கிறது என்ற எண்ணம் தோன்றுகிறது.

மேலும், 2 துணை வேந்தர்களை நியமித்ததில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் கூறியிருப்பது விடியும் முன் சேவல் கூவுவது போல ஏதோ ஒன்றை சூட்சமமாக கூறுகிறார்" என்றார் துரைமுருகன்.

More News >>