தமிழக ஆளுநர் குற்றச்சாட்டு- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் பதில்!
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக் கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிய குற்றசாற்றை தொடர்ந்து பதில் அளித்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தம்முடைய பணி நியமனம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெற்றது என்றுதெரிவித்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக் கணக்கான ரூபாய் கைமாறியுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி 2017-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முறைப்படி தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் தம்மை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது பகுதிநேர பேராசிரியர்கள் தொலைதூர படிப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் விரைவில் முழு நேர பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் கூறினார்.