யு-19 ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி, இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியப் போட்டி நடைபெற்று வந்தன. இதில், இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் இலங்கை அணி முன்னேறின. இதற்கான இறுதிப்போட்டி, வங்கதேசம் டாக்காவில் நடைபெற்றது.
இதில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி 304 ரன்களை குவித்தது.
இதில், இந்திய அணியை சேர்ந்த ஜெய்ஸ்வல், அனுஜ், பிரப் சிம்ரன் சிங், ஆயுஷ் படோனி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டை சந்தித்தது. இந்திய அணியை சேர்ந்த தியாகி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியாக, இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 144 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி வெற்றிப்பெற்றறு கோப்பையை கைப்பற்றி சீனியர்களை தொடர்ந்து ஜூனியர்களும் இந்தியாவிற்கும், கிரிக்கெட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.