பெண் கைதிகளுக்கு வீடியோ காலிங் வசதி: மகாராஷ்டிராவில் அறிமுகம்

நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா மாநில சிறைகளில் உள்ள பெண் கைதிகள் தங்களின் குடும்பத்தினரிடம் பேசுவதற்காக வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள் பெண்களுக்கான சிறைகளில் ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் காண அவர்களது குடும்பத்தினர் சிறைக்கு வந்து செல்கின்றனர். பெண் கைதிகளிடம் பேச நினைக்கும் குடும்பத்தினருக்கு வீடியோ காலிங் மூலம் பேசும் வசதி நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலிங் மூலம் 5 நிமிடங்கள் பேசலாம். அதற்காக, அவர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்த திட்டம் முதலில், புனேவில் உள்ள ஏராவாடா மத்திய சிறையில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இதன் பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பெண் கைதிகள் மற்றம் திறந்தவெளி சிறைச்சாலை கைதிகளுக்கு விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அவசர காலத்திற்கு மட்டுமே பயன்படும். கைதிகள் தங்கள் குடும்பதை சேர்ந்தவர்களிடம் மட்டுமே வீடியோ காலிங் மூலம் பேச முடியும். அதையும் காவலர் ஒருவர் அருகில் இருந்தபடி கண்காணிப்பார்.

More News >>