இதுதான் சுவச் பாரத் திட்டமா?சுவரில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் பாஜக நிர்வாகி!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்குத் தூய்மையான இந்தியாவை உருவாக்கி, அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் சுவச் பாரத். அக்டோபர் 1, 2014-ல் பிரதமர் நரேந்திர மோடியால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நாடு முழுவது கடைப்பிடிக்க பல வழிகளை கையாண்டது ஆளும் பாஜக அரசு.

இந்நிலையில் ராஜஸ்தானில் பாஜக தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சுவரில் சிறுநீர் கழித்த அக்கட்சி நிர்வாகி ஒருவர் இது பாரம்பரிய வழக்கம் என்றும் கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. நிர்வாகி  மற்றும்  ராஜஸ்தான் மாநில விதைகள் கழகத்தின் தலைவராகவும் இருப்பவர் ஷம்பு சிங் காட்டெசர் இவர் அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்த சுவரில் சிறுநீர் கழித்த புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷம்பு சிங் காட்டெசர் தாம் சிறுநீர் கழித்த இடம் ஒதுக்குப்புறமானது என்றும் இதனால் கிருமிகள் பரவாது என்றும் தெரிவித்தார். காலையில் இருந்து மிகவும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தால் அவசரத்தில் சுவரில் சிறுநீர் கழித்து விட்டதாகவும் இதில் தவறு ஒன்றும் இல்லை இது பாரம்பரிய வழக்கம் தானே என்றும் கூறி இருக்கிறார்.

More News >>