இதுதான் உலகிலேயே அதிர்ஷ்டக்கார பன்றிக்குட்டி!
பன்றிக் குட்டி ஒன்றிற்கு நடிகை எமி ஜாக்சன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஷங்கரின் 2.0 படத்தின் ரிலீசுக்கு வெயிட் செய்து வரும் எமி ஜாக்சன், அமெரிக்க தொடரான சூப்பர் கேர்ள் வெப் தொடரில் நடித்து வருகிறார். அவ்வப்போது, அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை மெர்சலாக்கும் எமி, தற்போது, சமூக வலைதளத்தில், பன்றிக் குட்டி ஒன்றிற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.
பொதுவாக நடிகைகள், நாய்க் குட்டி மற்றும் பூனைக் குட்டிகளை தான் தூக்கி கொஞ்சி முத்தம் தருவார்கள். ஆனால், வித்தியாசமாக எமி ஜாக்சன், பன்றிக் குட்டிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இது அந்த குட்டி பன்றி செய்த பாக்கியம் என நெட்டிசன்கள் கமெண்டுகளை தட்டி, லைக்குகளை கொட்டி வருகின்றனர்.