விஜய்சேதுபதியை ஓவரா சைட் அடிக்காதீங்க!
தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
செக்கச் சிவந்த வானம், 96 என தொடர்ந்து இருவாரங்களாக கோலிவுட்டின் கிங்காக மாறியுள்ள விஜய்சேதுபதி, முதன்முறையாக ஷில்பா எனும் திருநங்கை வேடமிட்டு நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதியே வெளியிட்டுள்ளார். மேலும், ”இதோ எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் தியாகராஜா குமாரராஜாவோட சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஃபர்ஸ்ட் லுக்” என சந்தோஷப்பட்டு பதிவிட்டுள்ளார்.
தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாராஜா, இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளன.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனைவரையுமே கவர் செய்துள்ளனர். அதில், நாயகிகளை ஓவர்டேக் செய்யும் ஷில்பா விஜய்சேதுபதியை பலரும் சைட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.