புதிய பாடத்திட்டம் அறிமுகம் - சி.பி.எஸ்.இ!
மத்திய அரசால் நடத்தப்படும் சி.பி.எஸ்.இ பாடத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவுத்தலின்படி, சிறந்தகல்வி நிபுணர்களைக் கொண்டு புதியக் குழுவை ஏற்படுத்தியது. தற்போது அக்குழுவின் மூலம் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மிகச்சிறந்த பாடதிட்டதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் வரை தேர்வு எழுதிய சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பாடத்திட்டம் பெரும் சாவாலாக இருந்தது. ஏனென்றால் பொது தேர்வில் 33% மதிப்பெண்களும், செயல்முறை தேர்வில் 33%மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இந்நிலையில் பழைய பாடத்திட்டத்தை மாற்றி புதிய முறையாக எழுத்துத்தேர்வு மற்றும் செயல்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்ற இப்புதுமுறை தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பாட திட்டம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் இதுக்குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.