இன்றைய ராசிபலன்கள் (09.10.2018)

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்:மேஷ ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

ரிஷபம்:ரிஷப ராசி அன்பர்களே, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனம் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மிதுனம்:மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

கடகம்:கடக ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வர முடியும். உத்யோகத்தில் உயர் நிலை ஏற்படும்.

சிம்மம்:சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். சுப காரியம் சிறிய தாமதத்திற்கு பின் நடக்கும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். தொழில், வியாபாரத்தை கவனமாக கையாளவும்.

கன்னி:கன்னி ராசி அன்பர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். பயணங்களால் நிறைய ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சுயமாக முடிவு எடுக்கவும்.

துலாம்:துலாம் ராசி அன்பர்களே, உங்கள் திறமைக்குத் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன், மனைவிடையே ஒற்றுமை அவசியம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்:விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். புது வீட்டிற்கு மாற வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் புத்திசாலித்தனம் தேவை.

தனுசு:தனுசு ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

மகரம்:மகர ராசி அன்பர்களே, எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்யவும். பெற்றோரிடம் வீண் வாக்குவாதம் ஏற்படும். நெருங்கிய உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

கும்பம்:கும்ப ராசி அன்பர்களே, குடும்ப தேவைகளை கேட்டறிவீர்கள். கணவன் மனைவிக்கிடையில் வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீனம்:மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். வீண் கோபத்தை குறைப்பது நன்மையை தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும்.

More News >>