2017-2018ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

2017-2018ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-2018ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியாக கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு, இந்த கால அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்றும், வருமான வரி கணக்கு தணிக்கை செய்பவர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இதேபோல், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

More News >>