ஒருநாள் பிரிட்டன் தூதராக மாறிய இந்திய மாணவி!

இஷா பெஹல் என்ற இந்திய மாணவி ஒரு நாளுக்கு பிரிட்டனின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நொய்டா பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் படித்து வரும் இந்த மாணவிக்கு பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒருநாள் தூதராகப் பணியாற்ற வாய்ப்பளித்துள்ளது.

அக்டோபர் 11ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 18 வயது முதல் 23 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் இஷா வெற்றி பெற்றார்.

பாலினம் தொடர்பான சிறிய வீடியோவை 58 மாணவிகள் அனுப்பி வைத்திருந்தனர். இதில் தேர்வு பெற்ற இஷா தமக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 8ஆம் தேதியான நேற்று, இஷா ஒரு நாள் பிரிட்டன் தூதராக பணியாற்றினார். இதுகுறித்து தெரிவித்த இஷா, ஒரு நாள் இந்த பதவியை வகித்தது எனக்கு பெருமை அளிக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்தின் உறவின் ஆழம் மற்றும் அகலத்தை என்னால் உணர முடிந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன். எதிர்காலத்தில், சமூக மாற்றத்திற்கான பணிகளை மேற்கொள்வேன் என்றார்.

More News >>