தனுஷின் மாரி 2ல் வரலட்சுமி

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் மாரி. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, மாரி 2 படம் எடுக்க இயக்குனர் முடிவு செய்தார்.

அதன்படி, மாரி 2வின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தனுஷூக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷூடன் வரலட்சுமி முதல்முறையாக இந்த படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>