மதுரையில் கனமழை- வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் செல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி, வெள்ளநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

மதுரையில் தொடரும் கனமழை காரணமாக செல்லூர், ஆணையூர், கூடல்புதூர் கண்மாய்கள் நிரம்பின. அங்கிருந்து வெளியேறும் மழைநீர் பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை அணைக்கு கலப்பது வழக்கம். தற்போது பந்தல்குடி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.

ஏற்கனவே அடைப்பு அதிகமாக இருந்ததால் தண்ணீர் வாய்காலை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நரிமேடு, மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் முழுவதும் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இன்று காலை பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள், அலுவலகம் சென்ற ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பந்தல்குடி கால்வாயை மழைக்கு முன்னரே தூர்வாரி இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்றுக் கூறிய அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாயை தூர்வாரி,அடைப்புகளை சரி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

More News >>