வன ஊழியரை அடித்துக் கொன்ற வெள்ளைப்புலி: ஜப்பானில் பரிதாபம்

ஜப்பானில் உள்ள மிருக காட்சி சாலையில் வன உயிரின காப்பாளர் ஒருவரை வெள்ளைப்புலி தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி உள்ளது. அங்கு, சிங்கம், புலி போன்ற வன விலங்குகள் உள்பட பிறவைகளும் உள்ளன. இந்த விலங்குகளை, வன உயிரின காப்பாளர்கள் பாதுகாத்தும், பராமரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி ஒன்று வன உயிரின காப்பாளரை திடீரென கடுமையாக தாக்கியது. வெள்ளைப்புலியின் இருந்து காப்பாளரை மீட்க, சக வன ஊழியர்கள் போராடினர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து காப்பாளரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் முடிவில், போலீசார் வெள்ளைப்புலியை துப்பாக்கியால் சுட்டு பின்னர், காப்பாளரை மீட்டனர். பலத்த காயமடைந்த காப்பாளரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால், காப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, குண்டடிப்பட்டு வெள்ளைப்புலியும் உயிரிழந்தது.

இந்த பரிதாப சம்பவம், வன ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>