நீதித்துறை நீதியின் பக்கம் நின்றது! நன்றி தெரிவித்த நக்கீரன் கோபால்.

நக்கீரன் கோபால் மீதனான வழக்கில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுவதாக கூறியது சென்னை எழும்பூர் நீதிமன்றம். நீதித்துறை நீதியின் பக்கம் நின்றது அதற்கு நன்றி தெரிவித்தார் நக்கீரன் கோபால் தனது கைது மற்றும் விடுதலை குறித்து பேசியதாவது

"ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி எங்களுக்கு வந்தது. அதை புலனாய்வு செய்து வெளியிட்டோம். அந்த செய்திக்காக, கைது செய்ததாக நீதிமன்றத்தில் தான் என்னிடம் கூறினார்கள் ஆனால் நீதித்துறை நீதியின் பக்கம் நின்றதால் நான் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளேன்.

பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்து 124 சட்டப் பிரிவில் நக்கீரனை கைது செய்ய முடியாது. அவருக்கு என் நன்றி என தெரிவித்தார், என் கைதுக்கு எதிராக போராடிய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நக்கீரன் கோபால்.

என்னை கைது செய்யப்பட்ட உடன் என்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் சந்திக்க வந்த வைகோ வந்திருந்தார் ஆனால் அவரை சந்திக்க விடவில்லை அவருக்கு நன்றி.

மருத்துவ சோதனைக்காக மருத்துவமனையில் இருந்த போது திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் வந்து பார்த்தது கருத்து சுதந்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு இருப்பதாக பெருமைப்படுகிறேன் என்றார்". 

More News >>