தீபாவளிக்கு விஜய்யுடன் மோதுகிறார் விஜய் ஆண்டனி!
தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படத்துக்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் போட்டியாக ரிலீசாகிறது.
இயக்குநர் ராஜமெளலியின் உதவி இயக்குநராக பணியாற்றியா கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் திமிரு புடிச்சவன் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாகவும், திமிருபுடிச்சவன் படக்குழு அறிவித்துள்ளது.
சர்கார் படத்துக்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே ஆகிய 2 படங்களும் அறிவிக்கப்பட்டு, பின்னர் பின்வாங்கின. தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாவது படமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளி பண்டிகை குறிவைத்துள்ளது.
இப்படத்தின் இயக்குநர் கணேஷா, இதற்கு முன், ஸ்ரீகாந்த், சுனைனா நடிப்பில் வெளியாகி ஃபிளாப்பான நம்பியார் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனிக்கு இந்த படமாவது வெற்றியை கொடுக்குமா என்பது படம் ரிலீசானவுடன் தெரிந்துவிடும்.