கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள் தெரிஞ்சிப்போமா?

அதிக அளவில் வாங்கப்படும் சிறுகீரை, அரைகீரை போன்று இல்லாமல் குறைந்த அளவே இக்கீரையை உபயோகின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களோ அதிகம். சரி என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என பார்ப்போம்.

கரிசலாங்கண்ணி கீரையாகத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர மங்கலான கண் பார்வை தெளிவு பெறும்.

இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும், ஈறுகள் பலப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சமஅளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும்.

ரத்த சோகை படிப்படியாக குறைய கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை முழுமையாக குணமடையும்.

கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். மேலும் முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.

இளநரை மறைய கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு சாப்பிட வர இளநரை மறையும்.

என்ன மக்களே இனி தொடர்ந்து கரிசலாங்கண்ணியை வாங்கி உபயோகிப்பீர்கள் தானே!.

More News >>