பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறினாரா மத்திய அமைச்சர்?

மூத்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி, மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

பாலிவுட் பிரமுகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் குறித்து ஏராளமான பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் வரிசையில் மூத்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி, மத்திய இணை அமைச்சர் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எம்.ஜே. அக்பர் கடந்த நாற்பதாண்டு காலத்தில் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அதுபோன்ற நாட்களில் அவர் தம்மிடம் ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பிரியா ரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.தற்போது 70 உறுப்பினர் கொண்ட குழுவுடன் வர்த்தக மாநாடு ஒன்றிற்காக நைஜீரியா சென்றிருக்கும் அமைச்சர், சர்ச்சை எழுந்த பின்னர் தம் சமூக ஊடக கணக்கில் எந்த ஒரு புது பதிவையும் செய்யவில்லை. அந்த மாநாடு செவ்வாயன்று நிறைவு பெறுகிறது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி, மத்திய இணை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது. இது குறித்து கருத்து கூற மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

More News >>