96 படத்தின் ஓபனிங் பாடல் வீடியோ வெளியீடு!

96 படத்தின் முதல் பாடலான கரை வந்த பிறகே பிடிக்குது கடலை என்ற பாடலின் முழு வீடியோ ரிலீசாகியுள்ளது.

கடந்த வாரம் வெளியான விஜய்சேதுபதியின் 96 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், முதல் காதலையும், முதல் காதலை பிரிந்த காதலர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் அந்த ஒரு நாளையும், மிகவும் அழகிய மெல்லுணர்வோடு கலந்து, ஒரு தூய்மையான காதல் காவியமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, முருகதாஸ், ஆதித்யா பாஸ்கர், கெளரி மற்றும் காவல் தெய்வமாக(வாட்ச்மேன்) நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள ஜனகராஜ் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

இப்படத்தில், டிராவல் போட்டோகிராபராக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். படத்தின் ஓபனிங்கே இந்த அழகிய பாடலுடன் தான் தொடங்கும். நாமும், இப்படி ஒரு வாழ்க்கையை வாழமாட்டோமா என ஏங்க வைக்கும் அளவுக்கு படம்பிடிக்கப்பட்ட இந்த பாடலின் வீடியோவை திங்க் மியூசிக் தற்போது, தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

More News >>