தொடரும் சாதி வெறி மீண்டும் ஒரு ஆணவக்கொலை!
கடந்த மாதம் ஒரு ஆணவக்கொலை மற்றும் கொலை முயற்சி தெலங்கானாவில் நடைப்பெற்றது தற்போது மீண்டும் ஒரு ஆணவக்கொலை கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் பெற்றோர் ஆணவக் கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சாயிதீபிகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குமாரின் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குமார் மாயமானார்.
இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக குமாரின் சடலம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து அங்கு சென்ற உறவினர்கள் குமாரின் உடலைக் கண்டு கதறி அழுதனர். அவரது உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன. கணவனின் உடலைக் கண்டு மனைவி சாய் தீபிகாவும் கதறி அழுதார்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர். அப்போது போலீசாரின் அலட்சியத்தாலேயே கொலை நடந்ததாகக் கூறி காவல்துறை வாகனம் மீது கல்வீசப்பட்டது. பின்னர் உறவினர்கள் அனைவரும் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிறன்று 4 பேர் தம்மை சுற்றி வளைத்ததாக செல்போனில் அச்சத்துடன் பேசிய குமார் பின்னர் மாயமாகி விட்டதாகவும், அவரதுசெல்போனும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் அவரது மனைவி சாய் தீபிகா கூறியுள்ளார்.
இது போல் தொடரும் சாதி வெறி கொலைகளை தடுக்க அரசாங்கம் உடனே நடவடிகக்கை எடுக்கவேண்டும். மக்களாகிய நாமும் திருந்த வேண்டும். அன்று சாதி ஒருவர் செய்யும் வேலையை வைத்து தீர்மானிக்கப்பட்டதே தவிர பிறப்பை கொண்டு அல்ல.
இன்று அனைவரும் படித்து அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள், சாதியை அரசியல் செய்வதற்காகவும், மக்களை பிரிப்பதற்காகவுமே ஒரு சிலர் பயன் படுத்துகிறார்கள் அவர்களை நாம் அனைவரும் மனித சமுதாயத்திலிருந்து நீக்க வேண்டும்.