அமெரிக்க இசை விருது விழாவில் டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை!

அமெரிக்க இசை விருது விழாவில் 22 விருதுகளை வென்று டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் அமெரிக்கன் மியூசிக் அவார்டு எனப்படும் அமெரிக்க இசைவிருது விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இவ்விருது விழாவில், நான்கு விருதுகளை வென்ற அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மக்களின் வாக்குகள் அடிப்படையில், அமெரிக்காவின் மாபெரும் இசை விருது விழா இது. இதில், இந்த ஆண்டிற்கான சிறந்த கலைஞர், மக்கள் விரும்பும் பாப் பாடகி, சிறந்த ஆல்பம் மற்றும் சிறந்த சுற்றுப்பயண இசைக் கலைஞர் ஆகிய நான்கு விருதுகளையும் டெய்லர் ஸ்விஃப்ட் வென்றுள்ளார்.

இதன்மூலம் 22 அமெரிக்க இசை விருதினை வென்ற வரலாற்று சாதனையை டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்த்தியுள்ளார். இதற்குமுன் 21 அமெரிக்க இசை விருதுகளை வென்ற பாடகி விட்னேவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் டெய்லர் ஸ்விஃப்ட்.

கறுப்பு மற்றும் வெள்ளி நிற கலவையில் மின்னும் டிஜிட்டல் போன்ற உடையை அணிந்து ரெட்கார்ப்பெட்டில் கலந்து கொண்ட டெய்லர்ஸ்விஃப்டின் அழகை கண்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர்.

வெற்றிப் பட்டியல்:

ஆண்டின் சிறந்த கலைஞர் -டெய்லர் ஸ்விஃப்ட்

சிறந்த பாடகர் - போஸ்ட் மலோன்

சிறந்த பாடகி - டெய்லர் ஸ்விஃப்ட்

சிறந்த குழு - மிகோஸ்

சிறந்த ஆல்பம் - டெய்லர் ஸ்விஃப்டின் ’ரெபுடேஷன்

சிறந்த பாடல் - கேமிலோ காபெலோவின் ’ஹவானா’

தேசத்தின் சிறந்த பாடகர் - கேன் பிரவுன்

தேசத்தின் சிறந்த பாடகி - கேரி அண்டர்வுட்

தேசத்தின் சிறந்த குழு - ஃப்ளோரிடா ஜார்ஜியா லைன்

தேசத்தின் சிறந்த ஆல்பம் - கேன் பிரவுனின் ‘ஹெவன்’

சிறந்த ஹிப்-ஹாப் கலைஞர் - கார்டிபி

சிறந்த ஹிப்-ஹாப் ஆல்பம் - போஸ்ட் மலோனின் ‘பீர்பாங்க்ஸ்’

சிறந்த ஹிப்-ஹாப் பாடல் - கார்டிபியின் ‘பொடாக் யெல்லோ’

ஆண்டின் சிறந்த சுற்றுலா பாடகி - டெய்லர் ஸ்விஃப்ட்

சிறந்த மீயூசிக் வீடியோ - கேமிலோ கபெலோவின் ’ஹவானா’

சிறந்த ஆல்டர்னெடிவ் ராக் பாடல் - பானிக் அட் தி டிஸ்கோ

சிறந்த அடல்ட் பாடல் - ஷான் மெண்டஸ்

சிறந்த லத்தீன் கலைஞர் - டாடி யான்கீ

சிறந்த சமூக மாற்ற பாடகர் - லாரன் டெய்கல்

ஆண்டின் சிறந்த அறிமுகம் - கமிலோ கபெலோ

More News >>