ராவாக வரும் வடசென்னை - சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ், அமீர், சமுத்திரகனி, கிஷோர், ஆடுகளம் நரேன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள படம் வடசென்னை. இப்படத்தை மூன்று பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் 17ஆம் தேதி வடசென்னையின் முதல் பாகம் திரைக்கு வருகிறது. நேற்று படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு பல்வேறு 'கட்’ கொடுத்தால், யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்றது.
படத்தை எந்த வெட்டும் இல்லாமல் வெளியிட படக்குழு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, படத்திற்கு க்ளீன் ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியது.
இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ராவா, எந்தவொர் கட்டும் இல்லாம பக்கா கல்ட் ஃபிலிமா வடசென்னை வருது என பதிவிட்டுள்ளார்.