இந்த விஜயதசமி விஜய் ரசிகர்களுக்கு விஜய் தசமி தான்!
சர்கார் படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில், துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு மூன்றாவது முறை விஜய் இணைந்துள்ள படம் சர்கார். வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது என சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயுத பூஜை அன்று டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியை படக்குழு தேர்வு செய்துள்ளதன் காரணம் என்றால், அன்று விஜயதசமி திருநாள். விஜயதசமி திருநாள் விஜய் ரசிகர்களுக்கு விஜய் தசமியாக மாறவேண்டும் என்ற நோக்கில் தான் டீஸர் ரிலீஸை அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஃபிக்ஸ் செய்துள்ளது படக்குழு.
சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் சரவெடியை கொளுத்தி போட்டது. சர்கார் படத்தின் பாடல்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், சர்கார் படத்தின் டீஸர் வெளியாகும் நாளை எதிர் நோக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள். டீஸர் வெளியான உடனே உலகளவில் சர்கார் டீஸரை டிரெண்டாக்க பல யுக்திகளை இப்போதிலிருந்தே திட்டமிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
மெர்சல் டீஸர் சாதனையை ரஜினியின் காலா மற்றும் 2.0 டீஸர்கள் முறியடிக்க தவறின. இந்நிலையில், மெர்சலின் சாதனையை விஜய்யின் சர்கார் முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ரசிகர்களும், சன்பிக்சர்ஸும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.