வேளாண் அதிகாரி மாயம் - அறிவிப்பு பலகையால் சலசலப்பு

தாம்பரம் அருகே வேளாண் அதிகாரியை 6 மாதமாக காணவில்லை என விவசாயிகள் வைத்த அறிவிப்பு பலகை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி தீனதயாளன், அவரது விளைநிலத்தில், வேளாண் துறை அதிகாரிகள் கடந்த 6 மாதமாக காணவில்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க மரியாதை செய்யப்படும் என்று ஒரு விளம்பர பலகையை வைத்திருந்தார்.

இந்த பலகை அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த, வேளாண் துறை இணை இயக்குனர் அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, வேளாண் துறை அதிகாரிகள் கடந்த 6 மாதமாக இங்கு யாரும் வரவில்லை. தங்களுக்கு போதுமான விதைகளும் கிடைக்கவில்லை பலமுறை அதிகாரியை தொடர்பு கொள்ள முயன்றும் பலன் அளிக்கவில்லை" என விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

பிரச்சினையை கேட்டறிந்த வேளாண்துறை துணை இயக்குநர், வேளாண் உதவி அலுவலர் வெற்றிவேல் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இனி இதுபோன்று நடக்காது என்றும் விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

More News >>