ஸ்டாலினுடன் நக்கீரன் கோபால் சந்திப்பு!
தி.மு.க தலைவர் ஸ்டாலினை, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் பேசிய அவர்,"தாம் கைது செய்யப்பட்ட போது பக்கபலமாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து ஆறுதல் கூறினர். அதற்காக நேரில் சந்தித்து நன்றி கூறினேன்" என்றார்
"டிடிவி தினகரன் எப்படி வந்தார் என ஏற்கனவே விளக்கமாக கூறியிருக்கிறோம். அவர் ஒரு உலகத்தலைவர். அவர் கருத்துக்கு, பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை" என நக்கீரன் கோபால் கூறினார்.
"மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநர் மாறி மாறி பேசி வருவதன் மூலம், இதன் பின்னனியில் சூட்சமம் இருப்பது தெரிகிறது. தனது கைது நடவடிக்கையின் பின்னனியில் மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன. நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைக்கிறார்கள்" என அவர் குற்றம்சாட்டினார்.
"ஆளுநரை விமர்சித்து எழுதியதில், அவர்கள் போட்ட திட்டம் வெளிவந்து விட்ட காரணத்தினால் கூட தன்னை கைது செய்திருக்கலாம்" என நக்கீரன் கோபால் கருத்து தெரிவித்தார்