பக்கத்து வீட்டுப் பையனுக்கு அங்கே சூடு வைத்த பெண்- கொடுமைடா சாமி
உறவுக்கு மறுத்த பக்கத்து வீட்டுப் பையனின் பிறப்புறுப்பை சூடான இடுக்கியால் பொசுக்கிய பெண்ணை போலீஸ் தேடி வருகிறது.
டெல்லி, நொய்டா பகுதியில் பாதல்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது சப்ராலா கிராமம். இங்கே வசித்து வரும் திருமணமான இளம் பெண்ணொருவர், அருகில் வசிக்கும் பதின்மூன்று வயது சிறுவனிடம் தவறான நோக்கத்தில் பழகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் யாருமில்லாத சமயத்தில் அச்சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுவனை அவர் பாலியல் நோக்கில் தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். சிறுவன் மறுக்கவே, அவனது பிறப்புறுப்பை சூடான இடுக்கியால் பிடித்துள்ளார். இதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த உடனே அப்பெண் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 323, 324, 342, 363, 506 ஆகியவற்றின் கீழ், தானாக முன்வந்து ஆயுதத்தால் காயப்படுத்தி தவறான விதத்தில் தண்டனை அளித்தல் மற்றும் ஆள் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துதலின் கீழ் போக்சா சட்டத்தின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இதை புலன்விசாரணை செய்து வருகின்றனர். என்ன கொடுமைடா சாமி இது!