தமிழகம்: நஷ்டத்தை குறைக்க 4000 பேருந்து சேவை நிறுத்தம்

சென்னை: பெரும் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மேலும் 4000 பேருந்துகளின் சேவையை நிறுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 23400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 2.4 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள். டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வருவாயை விட செலவு அதிகரித்தபடி உள்ளது. இதனால், போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால் புதிய பேருந்துகள் வாங்க போதிய நிதி ஒதுக்க முடியவில்லை.

ஏற்கனவே, சென்னையில் மழையால் சேதமைந்த சாலைகளால் பல வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாயை பெருக்குவது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே நஷ்டத்தை குறைக்க 2 மாதங்களுக்கு முன்பு 500 அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் 4000 அரசு பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களிலும் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் சேவை அதிகமாக குறைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து போக்குவரத்து

ழக அதிகாரிகள் கூறுகையில், “போக்குவரத்து கழகங்களில் வருவாயை அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது, தரமான சேவை வழங்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், பேருந்துகளின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். ஒரே வழித்தடத்தில் ஒரே நேரத்தில் கூடுதல் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக ஆராய்ந்து சேவைகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேருந்துகள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் முழு அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்படும்” என்றார்.

More News >>