நவராத்திரியின் இரண்டாவது நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

அம்பிகையை இன்று மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை “கவுமாரி என்றும், “குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள்.இன்று மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள்.

சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி “கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். “வேல் என்றால் “வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்

நவராத்திரி இரண்டாம் நாள் பூஜை:

வடிவம் : நவராத்திரி இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரிஅலங்காரம்.

பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்குதல் வேண்டும்.

திதி : துவிதியை

பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.

கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.

பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

More News >>