உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத டீ..!

இந்த காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பருமன். உடல் பருமன் ஆவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஜீன்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஜங்க் உணவுகள் எனப்படும் பீட்சா, பர்கர், கூல் ட்ரின்க்ஸ் போன்றவை. இதனால் அவர்கள் உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

இதுபோல் உடல் எடை அதிகரித்த உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? எவ்வளவு முயற்சித்தும் உங்கள் எடை குறையவே இல்லையா?அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

அதுவும் ஒரே ஒரு ஆயுர்வேத டீயை அன்றாடம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, அழகான உடலமைப்பைப் பெறலாம்.

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள மூலிகைகள், சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத டீயானது சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் டீயாகும்.

சரி, இப்போது இந்த ஆயுர்வேத டீயை எப்படி செய்வதென்றும், இதனை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சீரகம் – 1 டீஸ்பூன்மல்லி – 1 டீஸ்பூன்சோம்பு – 1 டீஸ்பூன்கிராம்பு – 7இஞ்சி – 2 துண்டுபட்டை – 2 இன்ச்தண்ணீர் – 1 லிட்டர்

ஆயுர்வேத டீயின் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.                

இந்த டீயை தொடர்ந்து குடித்துவர விரைவில் எடை குறையும். பொதுவாக சோம்பு, பட்டை, கிராம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே இந்த பொருட்களைக் கொண்டு டீ போட்டு குடிக்கும் போது, நிச்சயம் உடல் எடை குறையும்.

More News >>