மதுபோதையில் போலீசை அடி பின்னி எடுத்த நபர் கர்நாடகாவில் கைது!
கர்நாடகாவின் தேவனகிரி பகுதியில் வக்கீல் ரூத்ரப்பா மது அருந்திவிட்டு போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றிருக்கிறார். அவர் சென்ற வழியில் இருந்த போக்குவரத்து போலீசார் இருவர் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அந்த நபர் இதனால் போலீசாரும் அந்த நபரும் சாலையோரம் உருண்டு சண்டையிட்டுள்ளனர். போதையில் இருந்தவர் அருகில் இருந்த கடையிலிருந்து மண்பாண்ட பொருட்களை எடுத்து போலீசாரைத் தாக்கியுள்ளார் இதில் ஒரு போலீஸ் அதிகாரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே மற்றொரு போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார் இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கூடுதல் காவல்துறையினர் போதை ஆசாமியை அமுக்கிப் பிடித்து கைது செய்தனர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.