வெஸ்ட் இண்டீஸ் காளைகளை அடக்கியது நியூசிலாந்து!

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் பந்துவீசத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கொலின் மன்றோ 37 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்] 53 ரன்கள் ரன்களும், விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] 55 ரன்கள் ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக ஆண்ட்ரே ஃபிளட்சர் 27 ரன்களும், கார்லஸ் பிராத்வைட் 21 ரன்களும், ஆஸ்லே நர்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி மற்றும் செத் ரான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

More News >>