அமெரிக்காவில் வரலாறு காணாத புயல் - கரையை கடந்த மைக்கேல்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதி மைக்கேல் புயலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது.ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் வகையாக கருதப்பட்ட மைக்கேல் புயல் இன்று தென்கிழக்கு புளோரிடாவில் கரையை கடந்தது. பனாமா சிட்டி ,மெக்ஸிகோ பீச் போன்ற பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்க வரலாறில் இதுவரை கடந்து போன புயல்களில் மைக்கேல் புயல்தான் மிக வலிமைவாய்ந்த புயலாக கருதப்படுகிறது.

தற்பொழுது மணிக்கு நூற்றைம்பது மைல்( 225 KM ) வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.மேலும் பதினைந்தடி வரை நீர் தேங்கும் அபாயம் உள்ளதால் இன்றும் அநேகம்பேரை பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி அறிவுறுத்தபட்டுள்ளனர்.

மைக்கேல் புயல் வரும் நாட்களில் ஜார்ஜியா ,தெற்கு கரோலினா மாகாணங்கள் வழியாக பயணித்து வெள்ளிக்கிழமையில் வட அட்லாண்டிக் பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த செப்டம்பரில் பிளாரென்ஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதாரம் புயல்களினால் சரியாமலிருந்தால் நல்லது.

More News >>