இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்! சீனர்களுக்கு அறிவுரை

இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என சீன மக்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. சிக்கிம் எல்லையில் இருநாடும் துருப்புகளை குவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சீனத்தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவுக்கு சீனர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்தியாவில் வசிக்கும் சீன மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சீன துதரகத்தை அனுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

பூடானில் டோக்லம் பகுதியில், சீனத் துருப்புகள் சாலை போடும் பணியை மேற்கொண்டன. அதை இந்தியப் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

 

More News >>