வால்பாறையில் விபத்து - மலைவாழ் மக்கள் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலியாகினர்.
குருமலை காட்டுபட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர்.
காடம்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மினி லாரியின் ஓட்டுநர் ராஜனுக்கு ஓட்டுநர் உரிமமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மலைகிராமங்களில் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புற மக்கள் மினிவேன்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
அங்கே போதுமான வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாததால் இது போல் நிறைய உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று வேதனையுடன் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். அரசு தமிழக மலைவாழ் மக்கள் நலன் கருதி இனியாவது மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
உயிர் பயத்துடன் வாழவைத்து வாழ்வதற்கு எதற்கு எங்ககளுக்கு அரசு ஆட்ச்சியாளர்கள் நாங்கள் எங்கள் முன்னோர்களின் பாதையில் வாழ்வதே மேல் என்று அங்கு வாழும் இளைஞர்கள் தன் கண் முன்னே தனது மக்கள் சாவதை தடுக்க முடியாத கோபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
சேலத்திற்கு 8 வழி சாலை மக்களுக்கு அத்தியாவசியமானது இல்லை அதற்கு எதிர்ப்பையும் மீறி முனைப்புடன் செயல் படும் அரசாங்ககம் இது போல் தேவையுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே போதும் பதவிக்கு யாரையும் நம்பி இருக்க தேவையில்லை மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள்.