சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு வரும் 26ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதற்காக, திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, சிவந்தி ஆதித்தனாருக்கான மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. சில காரணங்களால், அந்த விழா வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: பாமர மக்களுக்கு கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

More News >>