வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, அக்டோபர் 8ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை.

மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைதவிர, வெப்பசலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களில் மழை  பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>