மஞ்சள் காமாலை நோய்க்கு வீட்டு மருத்துவம்

மஞ்சள் காமாலை உள்ளவர்களின் கண்கள் மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டு இரத்தத்தில் கலந்து உயிரையே பறிக்கக்கூடிய கொடூர நோயாகும். அதோடு இந்நோய் கல்லீரலையும் அதிகம் பாதிக்கிறது.சரி மஞ்சள் காமாலையின் அறிகுறி மற்றும் மருத்துவ குறிப்புகளை காண்போம்.

மஞ்சள்காமாலையின் அறிகுறிகள்

சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்

கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை விரைவில் குணமடையும். மேலும் அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம்50 கிராம் -பொடி செய்து ஒரு வாரம் காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.

தவிர்க்க வேண்டியவை

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் காட்டாயம் அசைவ மற்றும் அதிக எண்ணெய், நெய், காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

More News >>