தீபாவளி பண்டிகை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உள்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு புறநகர் பேரந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இதை தவிர, கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகளுக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். இதர இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

More News >>