விளையாடக்கூடாது என கூறிய பெற்றோரை கொன்ற அன்பு மகன்
பம்பரம் விடுதல், கோலி விளையாடுதல் போன்றுதான் பட்டம் விடுதல் இவ்விழா டெல்லியில் பெரும் விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பட்டம் விடுவதற்காக தன் பெற்றோர் மற்றும் சகோதிரியை வாலிபர் ஒருவர் கொலை செயதுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் மதிலேஷ். இவருடைய மனைவி சியா. இவர்களுக்கு மகன் சுராஜ்(19) மற்றும் மகளும் உள்ளனர்.
எப்போதும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுராஜ், படிப்பில் ஆர்வம் இல்லாமல் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். மேலும் பட்டம் விடும் பந்தயத்திலும் ஈடுபட்டு இருந்துள்ளான். இதனால் பெற்றோர்கள் சுராஜை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர் திட்டியதால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சுராஜ் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். அதன்படி சில தினங்களுக்கு முன்பு, சுராஜ் தன் தாய் தந்தை மற்றும் சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். பின் திருடர்கள் தான் தன் பெற்றோரை கொலை செய்துவிட்டு சென்றதாக காவல்துறையிடம் நாடகமாடியுள்ளான்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை, சுராஜ் மீது சந்தேகமடைந்து அவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சுராஜ் தன் தாய், தந்தை மற்றும் சகோதரியை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலத்திற்கு வந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அவனை கைது சிறையில் அடைத்தனர். விளையாடக்கூடாது என கூறிய பெற்றோரை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியோள்ளது.