நவராத்திரியின் மூன்றாவது நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று அம்பாளை, இந்திராணியாக அலங்கரித்து வழிபாடு செய்தல் வேண்டும். அம்பாள் இந்திராணி மாஹேந்திரி, சாம்ராஜ்யனி என்றும் அழைக்கப்படுகிறாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம், சூலம், கதாயுதம் தாங்கி, யானை வாகனத்தில் அமரும் வகையில் அலங்கரிக்க வேண்டும்.

ஆயிரம் கண்ணுடையவள், விருத்திராசுரனை அழித்தவள் என்பதால், தைரியமிக்கவளாய் கருதப்படுகிறாள்.சிவபிரான் தன் ஆனந்த தாண்டவத்தின் போது, இடது காலின் பெரு விரலால் போட்ட கோலம் தான் இன்று போட வேண்டும்.அது அஷ்டவஷ் கோலம் என சொல்லப்படுகிறது. அரிசி மாவுடன் செம்மண் கலந்து கோலமிட்டால், அம்பாள் அகம் மகிழ்வாள்.

மூன்றாம் நாள் வழிபாடு முறை

நைவேத்தியம்: நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டில் எலுமிச்சை சாதம், வெண் பாயாசம் அளிக்கலாம்.

மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி

பூஜை நேரம்: காலை 9:௦௦ - 10:30 மணி, மாலை 6:௦௦ - 7:30 மணி வரை முத்து வைத்து மலர் வகை கோலம் போட வேண்டும்.மொச்சைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வினியோகிக்க வேண்டும்.

தாம்பூலங்கள்: 9 முதல் 11 வகை தரப்பட வேண்டும்

ராகம்: ஆனந்த பைரவிசிறப்பு: ஸ்ரீ இந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்.இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள், வீரத்தின் தெய்வம், சிவப்பிரியை, இச்சா சக்தி.

பலன்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட, மூன்றாம் நாள் விரதம் இருத்தல் நலம். மாணவர்கள், இந்தக் கோலத்தை தரிசிப்பது, மிகவும் நல்லது.

More News >>