ஆந்திராவில் கொடூரம்: பெற்ற மகளை சீரழித்த ஆசிரியர் கைது
ஆந்திராவில், தனது 4 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்து சீரழித்த சம்பவம் முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார். இவர், அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாக மனைவி, 4 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மனைவியுடன் வசித்து வரும் மகளை மணி அவ்வப்போது சந்தித்துவிட்டு செல்வார். இந்நிலையில், மணி நேற்று தனது மகளை சந்திப்பதற்காக மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மகளிடம் பேசிவிட்டு அவரது காரிலேயே பள்ளியில் இறக்கிவிட்டு மணி புறப்பட்டுள்ளார்.
பின்னர், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து விசாரித்ததில், சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் தந்தை செய்த செயலை தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து மணிக்கு எதிராக போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் உடனடியாக மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதுகாக்க வேண்டிய வேலியே பயிரை மேய்ந்த கதையாய், மகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே காமக்கொடூரனமாக மாறி மகளின் வாழ்க்கையையே சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.