மொக்கை வாங்கிய திமிரு புடிச்சவன் டீஸர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

நம்பியார் படத்தை இயக்கிய கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் திமிரு புடிச்சவன் படம் வரும் தீபாவளிக்கு சர்காருக்கு போட்டியாக வருகிறது என பில்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீஸரை பார்த்த ரசிகர்கள், இதுதான் சர்காருக்கு போட்டியா? என்ற வகையில் கலாய்த்து வருகின்றனர்.

பிச்சைக்காரன், சைத்தான், இந்தியா பாகிஸ்தான், எமன் போன்ற படங்களில் நடித்த விஜய் ஆண்டனி, ஏன் இப்படி மொக்கை படத்தில் நடித்துள்ளார் என்றும் யூடியூபில் டீஸருக்கு கீழே கமெண்டுகள் தெறிக்க விடப்பட்டுள்ளன.

டீஸரின் ஒரு காட்சியும் ரசிக்கும் படியும் இல்லாமல், மேக்கிங் வீடியோ போன்று உள்ளதால், படம் தீபாவளி ரேஸில் காணாமல் போவது உறுதி என இப்போதே படத்துக்கு விமர்சகர்களும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இப்போதைக்கு திமிரு புடிச்சவன் டீஸர் தான் உள்ளது.

சாமி ஸ்கொயர் படத்தின் முதல் டீஸரும் இது போலவே மொக்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

More News >>