பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர்களை அடித்து விரட்டிய கேரள போலீசார்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நிலையில் சீராய்வு மனு, பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது பெண்களில் பலர் அரசே அனுமதி கொடுத்தலும் சபரிமலை செல்லமாட்டோம் என போராட்டம் தொடங்கினார்கள்.

பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் ஆன்மிகம் பூர்வமாகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டது.

அதேசமயம், தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள தீர்ப்பில் கூறுகையில் ‘‘ஆழமான மத உணர்வுகளைக் கொண்ட வழிபாட்டு உரிமையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அறிவுப்பூர்வமான வாதங்களை நுழைத்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல’’ எனக் கூறினார்.

இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியது:

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்சநீதிமன்றம் அதே தைரியத்துடன், மசூதிகளில் பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா? என கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சில இடங்களில் எதிர்ப்பு சிலை இடங்களில் வரவேற்பு என இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்  சபரிமலையில் மகளிருக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை கேரள மாநில போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரனின் வீட்டிற்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை கோவிலில் மகளிருக்கு அனுமதி அளிப்பதை கேரள அரசு எதிர்க்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறும் சூழ்நிலை ஏற்ப்படுவதை அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

More News >>