மோகன்லாலின் ஒடியன் டிரெய்லர் ரிலீஸ்!
மோகன்லாலின் ஒடியன் பட டிரெய்லரை படக்குழுவினர் தற்போது ரிலீஸ் செய்துள்ளனர்.
மலையாள சினிமாவின் பேண்டஸி திரைப்படமாக ஒடியன் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ளார்.
கேரளாவில் சொல்லப்படும் ஒரு மாவீரனின் கதைதான் ஒடியன். ஒடியன் தன் உருவை மாற்றும் சக்தி கொண்டவனாம். மின்சாரம் கண்டுபிடிக்கும் காலத்திற்கும் முன்னர் இந்த கதையின் களம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். நாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மலபார் பகுதியில்தான் ஒடியன் வாழ்ந்ததாகவும், அவனை பற்றிய மர்மங்கள் பல நிறைந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன் லால், மீசை இல்லாமலும், தாடி மற்றும் நீண்ட முடியுடன் இரு தோற்றங்களில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.