விஜயகாந்த் வீட்டில் 2 பசு மாடுகள் திருட்டு!
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பூந்தமல்லியில் கட்டி வரும் புதிய வீட்டில் வளர்க்கப்படும் 2 பசு மாடுகள் திருடப்பட்டுள்ளன.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அட்கோ நகரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புதிதாக பிரமாண்டமான வீடு ஒன்று கட்டி வருகிறார். இங்கு பாதுகாப்பு பனியில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் 3 மாடுகளில் 2 மாடுகள் மாயமானது. எங்கு தேடியும் மாடுகள் கிடைக்காததால், அச்சம் அடைந்த இரவு பணி காவலர்கள், விஜயகாந்த் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பில் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி கேமிராவின் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்புக்கதவு வழியாக மாடுகள் சென்றதா? அல்லது மர்ம நபர்கள் இரண்டு மாடுகளை ஓட்டி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் வீட்டிலேயே மாடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.