தெலங்கானாவில் எம்.பி ரமேஷ் இல்லத்தில் ஐடி ரெய்டு
ஐதராபாத் நகரில் உள்ள தெலுங்கு தேச கட்சி எம்.பி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் ஆளும் தெலுங்குதேச கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி.ரமேஷ். வீடு மற்றும் அலுவலகங்கள் ஐதராபாத் நகரில் உள்ளது. இன்று அதிகாலை அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடப்பாவில் உள்ள அவரது சகோதரி வீட்டிலும் சோதனை தொடர்கிறது.
வருமான வரித்துறையை சேர்ந்த சுமார் 60 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு, நாடு முழுவதும் வருமானவரித்துறை சோதனை எந்தந்த பகுதியில் நடைபெறுகிறது, ஏன் நடத்தப்படுகிறது, ஆந்திராவில் நடைபெறக்கூடிய வருமானவரித்துறை சோதனை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு எம்.பி.ரமேஷ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி இருந்தார்.
இந்நிலையில் எம். பி. ரமேஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இரும்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சி.எம் ரமேஷ் பதினொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வந்தார்.
அவரின் நடவடிக்கையை ஒடுக்கும் விதமாகவும் அவரை அச்சுறுத்தும் விதமாக மத்திய அரசு வருமானவரித்துறை சோதனை நடத்துவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.