திருவண்ணாமலையில் சாலை மாறியலில் ஈடுபட்ட பெண்கள்
திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மங்கனம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் போராட்டக்களத்திற்கு விரைந்து மக்களிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். விரைவில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் மக்களுக்கு உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட மக்கள் பின்னர், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.