ஜெ. உயிரோடு இருந்தபோதே சதி செய்து முதல்வராக திட்டமிட்ட தினகரன் - ஓ.பி.எஸ். தாக்கு
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அவருக்கு எதிராக சதி செய்து முதல்வராக திட்டமிட்டவர் டிடிவி தினகரன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து, சுயேட்சையாக நின்று டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார்.
இதனையடுத்து இன்று டிடிவி தினகரன் சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது அவர் சசிகலாவின் அதிமுகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்றும் பதவி கொடுத்தவர்களை ஒதுகிவிட்டார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ’கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது’ என்று கூறினார்.
மேலும், “2008ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அவருக்கு எதிராக சதி செய்து முதல்வராக திட்டமிட்டவர் டிடிவி தினகரன் என்ற ஓபிஎஸ், இது தெரிந்ததால்தான் அவரை ஜெயலலிதா எச்சரித்து அனுப்பினார்
2011ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை சேர்ந்த 16 பேரை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார் என்றும் அவர் கூறினார். 3 மாத்துக்குப்பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சசிகலா இணைந்தார்” என்றார்.