20 நிமிட காட்சிக்கு ரூ.1 கோடி சம்பளமாம்
ஸ்ரீதேவியாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்கிற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது என்.டி.ஆர். படக்குழு.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், டோலிவுட்டின் முன்னாள் சூப்பர்ஸ்டாருமான மறைந்த என்.டி.ஆரின் பயோபிக் உருவாகி வருகிறது. இதில், என்.டி.ஆராக அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.
வித்யா பாலன் லீடு ரோலில் நடிக்கிறார். சாவித்திரியாக இப்படத்தில், நித்யா மேனன் நடிக்கிறார். முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டு, பின்னர் அவர், பிசியானதால், நித்யா மேனனுக்கு சாவித்ரி ரோல் கிடைத்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, ஸ்ரீதேவியாக தான் நடிக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டாவில் வெளியிட்டார் ரகுல் ப்ரீத்சிங். இது ஸ்ரீதேவியா அல்ல ஸ்ரீரெட்டியா என நெட்டிசன்கள், பிறந்த நாளென்றும் பாராமல், டிரோல் செய்து தெறிக்கவிட்டனர்.
இந்நிலையில், என்.டி.ஆர். படத்தில் வெறும் 20 நிமிட காட்சியிலேயே தோன்றும் ரகுல் ப்ரீத்சிங்கிற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.